இதுவும் காதலா………..?
அந்த அழகிய காலைப் பொழுது
அவளது தொலைபேசி அலறியது
அவனின் காத்திருப்பு
அவளுக்கு புரிந்தது
அடுத்தொரு யோசனையுமின்றி
அக்கணமே புறப்பட்டாள்
அவனைக்காண
அன்பே,
ஆருயிரே,
கண்ணே,
மணியே, என
காலை முதல் மாலை வரை
மணிக்கணக்கில்….
அவனோடு…..
அந்த அழகிய (அழுகிய) மாலைப்பொழுது..
மீண்டும் அவள் தொலைபேசி அலறியது..
அப்போதுதான்…
அயல்நாடு சென்ற அருமைக்காதலன்
அவள் நினைவைத் தொட்டது…
தொட்டகுறை விட்டகுறை என
இங்கு இவனை விட்டுவிட்டு
எழுந்து சென்றாள்
எங்கோ இருக்கும் தன் காதலனோடு
இனிய மொழி பேச
இதுவும் காதலா……………….?
Advertisement
November 6, 2009 at 6:05 am
“அயல் நாட்டில் காதலி(லன்) இருப்பதனால் எப்படியும் வாழலாம் என்ற நிலை இல்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என நினைத்து வாழ்ந்தால்” உண்மை காதலுக்கு நினைத்ததும் மனதை மாற்றிக்கொள்ள தெரியாது சாகும் வரை!
பெண்களை மட்டும் குறை சொல்லாதீர்கள். ஆண் வர்க்கமும் ஏமாற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. எல்லா பெண்களையுமோ, எல்லா ஆண்களையுமோ பற்றி நான் கூறவில்லை.
நல்ல கவிதை
November 6, 2009 at 6:12 am
நீங்கள் சொல்வது சரிகீர்த்தி……… நன்றி
November 6, 2009 at 8:45 am
ஒருசில காதலினை (காதலியை) பற்றி அழகாக சொல்லி உள்ளீர் விஜய்.. “இதுவும் காதலா” என்பதைவிட “இவள் காதலியா” என்னும் தலைப்பு அழகாக பொருந்தும்..
வாழ்த்துக்கள் நண்பா..
November 6, 2009 at 8:48 am
இப்படியும் நடக்கிறது ,, உண்மைதான்,,,மிகவும் கவலைக்குரிய விடயம்..
February 26, 2010 at 6:26 am
very nice