சுகம்…….
தத்தி தத்தி
தவழ்கையிலே
தாய்ப்பால் சுகம்
அடியெடுத்து
அன்னநடை பழகையிலே
அருமைத்தந்தையுடன்
அங்குமிங்கும் செல்தல்
அளவற்ற சுகம்
பள்ளிப்பருவமதில்
பத்துநிமிட இடைவேளையிலே
பலநூறு ஆட்டங்கள்
ஆடுவதுதான்
என்ன சுகம்
வளர்ந்துவரும் பருவமதில்
தொடர்ந்துவரும்
நட்பு சுகம்
தொலைதூரப் பயணங்கள்
சொல்லொண்ணா சுகம்
பதினாறு வயதினிலே
பற்றிக்கொள்ளும் காதல்சுகம்
அப்பப்போ அவள்மீது கொள்ளும்
அன்பான ஊடல்சுகம்
அணைக்கையிலே அதிகசுகம்
கட்டிய மனைவி சுகம்
கடந்தகால நினைவுகளை அவளோடு
கதையாகச் சொல்லி
களிப்படைதல்
கனிவான சுகம்
பெற்றெடுத்த பிள்ளைசுகம்
பேரழவு நேரங்கள்
மழலைமொழி பேசி
மகிழ்ந்திருத்தல்
மட்டற்ற சுகம்
இத்தனை சுகங்கள் கண்டும்
ஏழுகளுதை வயது வந்தும்
தத்தி தத்தி தவழ்கையிலே
தாய்ப்பாலூட்டிய
தாய்மடியில் தலைசாய்தல் போல்
தரணியிலே சுகமுண்டோ……….
November 9, 2009 at 7:59 pm
// இத்தனை சுகங்கள் கண்டும்
ஏழுகளுதை வயது வந்தும்
தத்தி தத்தி தவழ்கையிலே
தாய்ப்பாலூட்டிய
தாய்மடியில் தலைசாய்தல் போல்
தரணியிலே சுகமுண்டோ……//
தாய் மடி அன்றி வேறொரு சொர்க்கம் ஏது.அது தானே
நாம் காணும் தெய்வம்.
தாய் மடி நினைவை கொடுக்கும் படைப்பு அற்புதம் தோழனே..வாழ்த்துக்கள்.