வாழ்க்கை வாழ்வதற்கே……
சுற்றிலும் பார்த்தேன்,
சுற்றியும் பார்த்தேன்
சுமையெதுவும் அற்றபோதும்
சுமையென்ற வார்த்தையை
சுமையாகச் சுமப்போர் பலர்
எது சுமை, எப்போது சுமை, எப்படி சுமை..
சரி சுமையாகத்தான் இருக்கட்டுமே
சுமைகளைக் கொடுத்த இறைவன்
சுமப்பதற்கு தோள்களைக் கொடுக்கவில்லையா..?
சுமந்துபார் சுமைகளும் சுகமாகும்
என்ன…..?
வாழ்வில் துன்பங்கள் நிறைந்திருக்கின்றனவா…?
உனக்கொன்று தெரியுமா….?
துன்பங்களின் அளவிலும் அதிகமே
மீண்டுவரும் வழிகளையும்
அந்த இறைவன் கொடுத்துள்ளான்
வழிகளை நீ பயன்படுத்து
வாழ்வு வலிகளற்றதாகும்
ஓ……….
வாழ்வில் தடைக்கற்களே அதிகம் என்கிறாயா……?
தடைவரும் அளவிலும் பன்மடங்கு
தகர்த்தெறியும் தைரியம் உன்னிடமுண்டு
தன்னம்பிக்கையோடு பயன்படுத்து தைரியத்தை
தடைக்கற்களும் இனிப் படிக்கற்களாகும்
இன்னல்கள் மடடுமே
உன் வாழ்வில் நீடிக்கின்றன என்கிறாயா…..?
ஒருக்காலும் இல்லை,
ஒன்று தெரியுமா
எதுவுமே எப்பொதும் நீடிப்பதில்லை
நம் இன்னல்களும் கூட
சில உண்மைகள் கேள்
ஒளியிருந்தால் இருளிருக்கும்
குளுமை இருந்தால் வெப்மிருககும்
உயரம் இருந்தால் பள்ளமும் இருக்கும்
அமைதி இருந்தால் புயல் இருக்கும்
வளம் இருந்தால் வறுமை இருக்கும்
வாழ்க்கை இருந்தால் மரணமும் இருக்கும்
வாழ்ககையில்
சுமைகளும் இருக்கும் சுமப்பதில் சுகங்களுமிருக்கும்
துன்பமும் இருக்கும் மீளும் வழிகளும் இருக்கும்
தடைக்கற்களுமிருக்கும் அது படிக்கற்களாகவும் மாறும்
மொத்தத்தில் நேர்களும் இருக்கும் மறைகளும் இருக்கும்
மறைகளை மறந்து நேர்களைப் பார்
நிறைவான வாழ்க்கை உனக்குண்டு
வாழ்க்கை வாழ்வதற்கே……
November 24, 2009 at 9:31 am
Great work bro. This is reality. I like your poems alot
They are very inspiring
November 24, 2009 at 9:32 am
Nice work bro.
I like your poems. They are very inspiring
December 8, 2009 at 7:46 am
ஒருகணம் பலவாறு சிந்திக்க வைக்கும் உன் சிந்தனைகளின் எழுத்து வடிவம், உண்மையான பாராட்டுகள் பெறவேண்டிய ஒரு அற்புதமான உன் சொத்துக்கள்.
உன் ஆற்றல் மேலும் மேலும் வளர வேண்டும்…..
என்றும் என் அன்பும் ஆசியும் உனக்காக…
December 8, 2009 at 8:19 am
Thanks Roy, Thank you so much
December 9, 2009 at 12:49 pm
அருமை தம்பி . உங்கள் சிந்தனைகள் வரி வவெம் பெற்று வந்துள்ளதை காண முடிகிறது.
December 11, 2009 at 6:06 am
மிகவும் நன்றி அண்ணா
May 6, 2011 at 6:38 am
அன்புக் கவித் தம்பீ!
நான் வித்யாசாகரின் அன்புக்குரிய
தமிழ் நாட்டுக் கவிஞன்.
இலக்கியப் பேச்சாளன்.
என்னைச் சற்றே.. என் வலை தளத்தில்
கண்டு கொண்டு பிறகு வாயேன் பேசுவோம்.
தொடர்ந்து சந்திப்போம். சிந்திப்போம்.நன்றி.