உயிர்ப் பிணங்கள்
உயிரற்றுப் போனால்
உரைக்கின்றீர் பிணமென்று
உயிருள்ள போதும் – மனித
உணர்வற்றுப் போனால்
உயிருள்ள பிணம்தான் நீயும்
பார்வையிளந்தால்
பார்க்கின்றீர் குருடனென்று
பார்வையுள்ள போதும் – பிறர்துன்பம்
பாரர்க்க மறுத்தால்
பார்வையிள்ள குருடன்தான் நீயும்
கேண்மையிளந்தால்
கேட்கின்றீர் செவிடனென்று
கேட்கும் திறனிருந்தும் – பிறர்கஸ்ரம்
கேட்க மறுத்தால்
கேட்பதுனை எவ்வாறு
கைகளற்றுப் போனால்
காண்கின்றீர் ஊனம்
கைகளிருந்த போதும்
கைகொடுக்க மறுத்தால்
கயவனல்லோ நீயும்
உணர்வற்றுப் போனால்
உரைக்கின்றீர் ஏதேதோ
உணர்வுள்ளபோதும் – பொது
உணர்வற்றுப் போனால்
உரைப்பதுனை எவ்வாறு
உயிருள்ள பிணமேன்றோ……?
Advertisement
December 9, 2009 at 11:42 am
உணர்வற்றுப் போனால்
உரைக்கின்றீர் ஏதேதோ
உணர்வுள்ளபோதும் – பொது
உணர்வற்றுப் போனால்
உரைப்பதுனை எவ்வாறு
உயிருள்ள பிணமேன்றோ……?
நிதர்சனமானது. இது பிணங்கள் வாழும் சுடு காடல்லவா..
December 11, 2009 at 6:05 am
நன்றி தயா அண்ணா