இயேசையா…..
மண்ணுக்கு பெருமை – மைந்தன்
நீயிங்கு வந்ததனால் – அந்த
விண்ணுக்கு பெருமை – தேவன்
நீயங்கு இருப்பதனால் – எம்
கண்ணுக்குப் பெருமை – உன்னுருவம்
தினம் காண்பதனால் – அந்த
புண்ணுக்கும் பெருமை – உன்மேனி
புண்பட்டதனால் – விச
முள்ளுக்கும் பெருமை – என்தேவன்
முள்முடி சூடியதால் – வெறும்
கல்லுக்கும் பெருமை – அந்த
கல்வாரி சொல்லுமுன் பாடுகளால் – இரும்பு
ஆணிக்கும் பெருமை – உன்
மேனியிலே அறைந்ததனால் – மர
ஏணிக்கும் பெருமை – தேவனுனை
சிலுவையிலே ஏற்றியதால் – செய்த
பாவத்திற்கும் பெருமை – என்தேவன்
நீயெம்பாவங்கள் சுமந்ததனால் – கொடும்
பாவிக்கும் பெருமை – என்தேவன்
நீயந்தப்பாவிகளை மன்னித்ததால் – எம்
பிறப்புக்கும் பெருமை – நீவந்து
பிறந்ததனால் – எம்
இறப்புக்கும் பெருமை – நீ
இறந்தும் உயிர்த்ததனால்…
Advertisement
February 26, 2010 at 6:23 am
very nice