என் அன்னை

சொல்ல வார்த்தைகள் இல்லை அவளன்பை
சொல்லாமலும் முடியவில்லை
மெல்லத் திறக்கின்றேன் அவளைக் கூற
மேனியெல்லாம் சிலிர்க்கிறது
மெய்யான அவளன்பை எண்ணி எண்ணி

அகிலத்தில் அன்புக்கு அர்த்தம் கண்டேன்
அன்னையென்ற வடிவினிலே
என்னதவம் செய்து விட்டேன்
இவ்வுலகில் அவளன்பு கிடைத்திடவே

ஈரைந்து மாதங்களெனை சுமந்து பிரசவித்தாள்
இவ்வையகத்திற்கெனை முகவரியிட்டாள்
எனக்கது முதல்பிறவி
எனக்காக அவளெடுத்தது மறுபிறவி

அறியாத வயது வரை அவளன்பு புரியவில்லை
ஆனபோதும் அயலவர்கள் கூறக்கேட்டேன்
“அன்னையுனை நேசிக்கவில்லை
சுவாசிக்கின்றாள்” என்று

உலகம் தெரிந்த நாள் முதலாய் உணர்கின்றேன்
உயிர் தந்த தாயின் உன்னதத்தை
என்னுடல் வளர்த்தாள் தினம்தினம்
அவளது உயிர் வதைத்து

மேனியெல்லாம் வலிக்கிதென்று
மெய்மறந்து தூங்கச் செல்வாள்
பொய்யான என்னழுகை கேட்டு
மெய்யாக அவளளழுதிடுவாள்

என்னன்னை படுத்துறங்கும் நேரத்தில்
எனக்கோ பசியென்று சொல்வேன்
அவளுறக்கம் மறப்பாள்
எனக்குணவளித்து மகிழ்ந்திடுவாள்

பள்ளிக்கு நான் சென்றிடுவேன்
பண்பான நண்பருடன் மகிழ்ந்திருப்பேன்
அன்பான எனனன்னை
எனைப் பிரிந்து ஏங்குவதை

வந்தவுடன் நானறிவேன்
வஞ்சியவள் அன்பையெண்ணி
என் கண்ணில் நீர்கசியும்
கதைகள்பல சொல்லியெனைத் தேற்றிடுவாள்

அன்னையவள் சொல்லுகின்ற கதைகளிலும்
அறிவுரைகள் பல செறிந்திருக்கும்
அன்பெனும் ஏணிதந்து ஏற்றிவிட்டாள்
அகிலத்தில் எனை இன்று

எழுத எழுத இனிக்கிறது என் அன்னையை
எழுதி முடிக்க ஏட்டிலுள்ள எளுத்துக்கள்தான் போதுமா
அவளன்பைக் கூறி முடிக்க
அகராதியிலுள்ள வார்த்தைகள் தான் போதுமா

அடுத்தொரு ஜென்மமுண்டனில்
அன்னையே அதிலும்
உன்மடியில் நான்துயில வெண்டும்
எனையணைக்க தாயவள் நீயின்றி
தரணியிலே யாருமில்லை…………….

Advertisements

One Response to “என் அன்னை”

  1. தாயன்பின் பெருமைதனை தன்மையாக வரிகளில் வடித்துள்ளீர் விஜய் வாழ்த்துக்கள்

    தொடரட்டும் உங்கள் வலையுலக பயணம்
    கருத்துக்களை பகிர நாங்கள் இங்கே

    வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: