அன்புத் தங்கச்சிக்கு

என் அன்புத் தங்கையை
எழுத நினைக்கும் போதே
எங்கெங்கோ விரிகிறது
என் நினைவுகள் அவள்
எதிர்காலத்தை எண்ணி எண்ணி…..

எனைப்பற்றி சிந்தித்த நாட்கள்
என்று சொல்ல ஏதுமில்லை
தினம் தினம் சிந்திக்கின்றேன்
சிறியவளின் சிறப்பான வாழ்க்கை பற்றி

இவ்வுலகில் அதி உச்ச
இன்பத்தை நான் உணர்ந்ததில்லை
இப்பூவுலகில் அவளைக் காணும்முன்

முளுநிலவைக் நான் கண்டேன்
முதன்முதலில் முத்தான
அவள் முகத்தினிலே

மலர் என்றல் மென்மை என்பர்
மன்னிக்க வேண்டும் நான் அறிந்ததில்லை
அவள் பிஞ்சுக்கரங்களை பிடிக்கும் முன்

சூரியன்தான் பிரகாசம் என்பர்
சூனியக்காரர்
சுடர்விடும் அவள் கண்களைவிடவா

தேனென்றால் தித்திக்கும் என்பர்
அளவற்ற அன்பு கூட தித்திக்கும்
அவள் மீது கொண்ட அன்பினால் கூறுகின்றேன்

தேவதைகள் சிலசமயம்
பூவுலகிற்கு புறப்படுவதுண்டு
புத்தகங்களில் படித்துள்ளேன்

புரியவில்லை அப்போது
இப்பூவையும் அப்பாவையோ
பலசமயம் வியக்கின்றேன் இப்போது

சிறுகீறல் அவள் மீது பட்டாலும்
சிதைந்து போகின்றேன் என்
சிந்தனையை இழந்து நிற்கின்றேன்

கனவினில் கூட காயப்படக் கண்டாலும்
கண்டது கனவென்று தெரிந்தும்
கண்கள் நிறுத்துவதில்லை கண்ணீரை

அவள் பிஞ்சு உள்ளம் சிலசமயம்
நொந்து போகக் கண்டால்
இப்பேருலகையே வெறுக்கின்றேன்

இறைவனிடம் கேட்கின்றேன் ஒன்று
என்னைவிட முன் செல்ல வேண்டும்
எல்லாப்பயணத்திலும் அவள்

அவளைவிட முன்செல்லவேண்டும் நான்
என் இறுதிப் பயணத்தில்
அவளின்றி இவ்வுலகில் வாழ
அணுவளவும் சக்தியில்லை என்க்கு…..

Advertisements

One Response to “அன்புத் தங்கச்சிக்கு”

  1. //சிறுகீறல் அவள் மீது பட்டாலும்
    சிதைந்து போகின்றேன் என்
    சிந்தனையை இழந்து நிற்கின்றேன்//

    தங்கை மீதான பாசம் வியக்க வைக்கின்றது. உன் போன்ற ஓர் அண்ணன் எனக்கு இல்லையே என கவலையாக உள்ளது நண்பா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: