மரணம்

மமதையிலிருக்கும் மனிதா
மரணத்தைப்பற்றி சிந்திக்கத் தவறிவிட்டாயா…?
உடற்பலமிருப்பதையெண்ணி
உறவுகளை வெறுக்கின்றாய்
உயிரற்றுப்போகுமொருநாளென்பதை
உணரமறுக்கின்றாய்

கோடிபணமிருப்பாதல்
கொள்ளையின்பம் காண்கின்றாயா…..?
ருபாயொன்றே உன்னுடலோடு
ஊர்வலம்வரும் உயிர் போனபின்
உணர்ந்துகொள்

அறுபதேக்கர் நிலமிருப்பாதல்
அவமதிக்கின்றாய் அன்புளம்கொண்டபலரை
ஆறடிநிலம்தானுனக்குசொந்தம்
அதுவுமுன்னிலமல்ல பொதுநிலம்தான்
புரிந்துகொள்

உணவின்றி உயிருக்குப்போராடும்
உள்ளங்களையுதறித்தள்ளிவிட்டடு
உடல்வளர்க்கிறாய் நீமட்டும்தின்று
உயிர்சென்றபின் உன்னுடம்பை மண்தின்னும்
மறந்துவிட்டாயா…….?

உடுத்தக்கூடஉடையின்றி
உணர்வுகளைக் கொன்றுவாழ்வோர் பலருளர்
உயிரற்றுப்போகுமுடலுக்கு
உடைக்குமேலுடையுடுத்தி
இன்பம் காண்கிறாய் நீ

உறங்கக்கூட ஓரிடமின்றி
ஓரங்கள்தேடியலைவோர் பலருளர்
உயரத்திலுறங்கிகின்றாய் ஒய்யாரமாய்
உறக்கத்திலுமுயிர் பிரியுமென்பதை
உணராமல் நீ

மதிகெட்டவனே மரணமுன் அருகிலேதான் உண்டு
மனிதம் கொன்று வாழாமல்
மனிதம் கொண்டு வாழ்
மறைந்தபின்னும்
மங்காதுன்பெயர்

Advertisements

One Response to “மரணம்”

  1. maithily kannan Says:

    நிஜமாவே உண்மையை சொன்னிங்க விஜய் நன்றி ………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: