அகதிமுகாமிலிருந்து ஒருகுரல் – ஓ நாளை தீபாவளியல்லவா

ஓ நாளை தீபாவளியல்லவா

எங்கே எனக்கு புத்தாடை……….?
புத்தாடை கொடுக்கும் தந்தைதான்
புதைகுளிக்குள் இருக்கின்றாரே
பொல்லாத இந்த யுத்தத்தால்

எங்கே எனக்கு இனிப்புக்கள்
இனிப்புக்களை எனக்கூட்டும் என்னன்னைதான்
எரிந்து போனாளே
ஈனர்கள் வீசிய எரிகுண்டினால்

எங்கே என் மகிழ்ச்சி
நான் மகிழ்ந்திருந்த என்னுடன்பிறப்புக்கள்தான்
உறங்குகின்றனர் மரணப்படுக்கையில்
மனிதநேயமற்ற யுத்தத்தால்

எங்கே என் துள்ளல்கள்
துள்ளித்திரிந்த கால்கள்தான்
துரப்பறந்ததுவே
துஸ்டர்கள் வீசிய குண்டினால்

எங்கே நான் தீபமேற்றிய வீடு
தீப்பற்றி எரிந்துவிட்டதோ…?
எங்கே நான் கோலமிட்ட முற்றம்
இன்று இரத்தக்கோலத்துடனா

எங்கே நான் சென்ற கோயில்
சிலையிருந்த இடங்களெல்லாம்
மனிதச்சிரசுகள் இருக்கின்றனவாம்
இரத்தமும் சதையுமங்கே இனிய பிரசாதமாம்

எங்கே எனைவாழ்த்தும் உறவுகள்
உயிரற்றுப் போயின சில
உணர்வற்றுப் போயின பல
ஊரே மாயானமாக காட்சியளிக்கின்றன

மலருகின்ற தீபாவளிக்கு நானென்ன செய்வேன்….?
மறைந்த எந்தையிடம் செல்வேனா…?
எரிந்த என்னன்னையிடம் சேல்வேனா…..?
சரிந்த நற்சகோதரரிடம் செல்வேனா…..?

வீட்டுக்கு செல்வேனா…..?
சுடுகாட்டுக்கு செல்வேனா….?
தீபங்கள் ஏற்றுவேனா…..?
தீப்பற்றியெரிந்துவிடுவேனா….?

இன்றே நான் இறந்துவிட்டாலும்
நாளைய தீபாவளிக்கு
நல்வாழ்த்துக்கள் தமிழர்களே
நல்வாழ்த்துக்கள்

Advertisements

3 Responses to “அகதிமுகாமிலிருந்து ஒருகுரல் – ஓ நாளை தீபாவளியல்லவா”

  1. //எங்கே எனைவாழ்த்தும் உறவுகள்
    உயிரற்றுப் போயின சில
    உணர்வற்றுப் போயின சில
    ஊரே மாயானமாக காட்சியளிக்கின்றன//

    யாரோடு உறவாடி ஊரோடு தீபமேற்றுவேன் என் உறவுகளை தொலத்து விட்டு உணர்விழந்து நின்றுகொண்டு

    வலிகளை தருகின்றது உன் வரிகள்

  2. கண்கள் கலங்கி நிற்கிறேன்..வேண்டாம் இந்த குதுாகலங்கள் எம் வாழ்வில் என்று ஒரு வட்டத்துள் நின்று கொண்டேன் பல வருடங்களாய், அன்றாரு நாள் நான் கேட்ட அந்த அழுகுரலை எண்ணி..இன்றுவரை என் வாழ்க்கை சக்கரததின் அச்சாணியாய் அதுதான் இருக்கிறது

  3. நண்பரே கண்கலங்க வைத்தது விட்டீர்கள். அருமையான வரிகள். நிஜம் இதுதான் என்ன செய்வது காலம் எல்லாவற்றையும் மாத்தும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: