கைதியா இவன்………..?

கைதியா இவன்……..?
கண்களைமட்டுமல்ல
கடவுளையும் கூட
நம்பமுடியவில்லை
காலத்தின் சோதனையா இது…..?
கயவர்களின் சதியா இது…..?
இன்றுவரை ஏற்கமுடியவில்லை
இனியவனின் நிலையை……………….

எங்கிருந்தோ வந்தான்
ஏட்டுக்கல்விதனை பெற்றிடவே
உயர்ந்துநின்றான்
உயர்கல்வி தனிலே……
பல்கலைக்கழகம் சென்றான்
பல்கலையும்கற்றிடவே
பழகிவந்தான் பண்புடனே
பலருடனும்……….

“சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்”
இத்தனையும் கண்டேன்
இவனிடமே நான்
இவன் வரைந்துவிட்ட ஓவியங்களை
வர்ணிக்க வார்த்தைகளேயில்லை
பள்ளிக் கூடம்முதல் பல்கலைக்கழகம் வரை
இவன் ஓவியம் இல்லாத இடமுமில்லை

சிறுவயதுமுதல் சீர்கணிதத்தில்
சிறந்துவிளங்கியதால்
சிறுசிறு வகுப்புக்களும்
சிறப்பாக நடத்திவந்தான்
வழமைபோல் வகுப்புக்கு
சென்றுவரும் வேளையிலே
வஞ்சகர் செய்தசதியால்
வழமைக்கு மாறாக நடந்ததொரு நிகழ்வு

விதியோரம் இவன்வருகையில்
சாலைநடுவே வெடித்ததொருகுண்டு
வெடித்தகுண்டு இவன் வெள்ளைமேனியை தொடும்முன்
வேல்போன்று பாய்ந்தன துப்பாக்கி வேட்டுக்கள்
காவலரன் வேறு இருந்ததால்
கைதுசெய்யப்பட்டான் கள்ளமற்ற இவன்
அங்கங்கள் அனைத்தும் இரத்தக்கறையுடன்
அனுமதிக்கப்பட்டான் வைத்திசாலியில்

ஆறுமாதங்கள் வரை நீண்ட
அறுவைச்சிகிச்சையின் பின்
அடைக்கப்பட்டான் விளக்கமறியலில்
அல்லல்படுகின்றான் இன்றுவரை
தமிழன் என்பதால் தப்பிக்கமுடியவில்லை
தப்பேதும் செய்யாது தண்டனையா……….?
தவிப்பது இவன்நெஞ்சம்மட்டுமல்ல
தமிழர் எம்நெஞ்சமும் தான்

எந்தபாவமும் அறியாதவன் என்றுதெரிந்தும்
“ஏனிந்தநிலையுனக்கு ஏதேனும் பாவங்கள் செய்தாயா”
என்றுகேட்டேன் என்நண்பனிடம்
“எலிப்பொறிகூட வைப்பேன் இரையைமட்டும் உண்டுவிட்டு
எலிதப்பிவிடும்வகையில்”
என்றுரைத்த இவன்வார்த்தைகள்
இன்றும் என்காதுகளில் ஒலிக்கின்றது
இதயம் வலிக்கின்றது

வளக்குகள் தொடர்கின்றன
வாதாட்டமும் நீளுகின்றன
விடையேதுவுமில்லை விடுதலையுமின்னுமில்லை
வீணாகக் களிகின்றன காலங்கள் கைதியாகவே
கனிவான என் வேண்டுகோள் ஒன்று
கவிதையாக மட்டும் படித்துவிட்டு  செல்லாது
கடவுளையும் பிரார்த்தியுங்கள் நண்பர்களே
கண்ணியமான இவன் விடுதலைக்காக

Advertisements

6 Responses to “கைதியா இவன்………..?”

 1. இது வெறும் கற்பனை அல்ல நண்பர்களே
  கண்ணீரினால் எழுதிய கவிதை

 2. உண்மை சம்பவமென உரைக்க தேவையில்லை நட்பே! இது போன்ற எத்தனையோ உயிர்கள் ஏட்டுக்கல்வியை, ஆரம்பக்கல்வியையே தொலைத்து இருப்பதற்கு இடமில்லாலல் கூட தமிழனாக பிறந்ததனால், என்று தான் தீருமோ இந்த கொடுமைகள், உன் நட்பை என் நட்பாய் ஏந்தி நானும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்

  வலி சுமந்த உன் வார்த்தைகளை அருமை வாழ்த்துக்கள் என சொல்லி சென்று விட முடியவில்லை ஏதோ நெஞ்சம் வலி கொள்கின்றது

  வலி நெஞ்சை தொடுகின்றது

 3. தமிழன் வாழ்க்கை இதுதான் வேறு என்ன சொல்ல. அழகாக வடித்திருக்கின்றீர்கள்

 4. “எலிப்பொறிகூட வைப்பேன் இரையைமட்டும் உண்டுவிட்டு
  எலிதப்பிவிடும்வகையில்”
  என்ற வரிளில் தெரியும் அவனது குணம் கண்டு கண்கலங்ப முடியவில்லை..தோழனே.
  இருந்தும் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிப்பவர் பட்டியல் பல அதற்குள் உங்கள் நன்பரும் ஒருவன்…நீதியை நம்பும் துாரத்தை நான் கடந்து விட்டேன்
  இருந்தும் உங்கள் நன்பர் மீண்டு வர வுண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்
  வநடதால் தெரிவித்து விடுங்கள்

 5. என்னை நல்லம் என்று கூறுபவர்களிடம் நான் கூறுவது என்னைவிட எத்தனையோ மடங்கு அவன் நல்லம் என்று, அவனுக்கு இந்நிலை எனும் போது ஏற்கமறுக்கிறது மனம்

 6. //வளக்குகள் தொடர்கின்றன
  வாதாட்டமும் நீளுகின்றன
  விடையேதுவுமில்லை விடுதலையுமின்னுமில்லை
  வீணாகக் களிகின்றன காலங்கள் கைதியாகவே//

  நிஜமான வார்த்தைகள். வலிக்கின்றன

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: