இனி வருமோ

அன்புத்தந்தையே எனை
அழவிட்டு சென்றதேனோ
உன்னோடு நானிருந்த
உன்னத நாட்கள்தான் இனி வருமோ

பிஞ்சுப் பருவமதில்
உன் நெஞ்சிலன்றி
பஞ்சுமெத்தையில் கூட
படுத்துறங்கி நானறியேன்

தோள்மீது நானிருந்து
தொல்லை பல கொடுத்திடுவேன்
தொல்லையென்று தெரிந்தும் உனக்கது
எல்லையற்ற இன்பமென்றோ

கால் இடறி நான் விழுவேன்
வலியெதுவும் எனக்கில்லை
ஆனபோதும் உன்
விழிவளியே நீர் கசியும்

என் கண்ணில் தூசு பட்டால்
கணப்பொழுதில் நான் மறப்பேன்
கள்ளமற்ற உன் வெள்ளையுள்ளம்
எண்ணி எண்ணி கலங்கிடுமே

பள்ளிப் பருவமதில்
செல்ல மறுத்திடுவேன்
உன் பண்பான வார்த்தை கேட்டு
பட்டென்று பறந்திடுவேன்

தலை நிமிந்து நிற்கின்றேன்
தரணியிலே நானின்று
இருந்த போதும் தவிக்குறது நெஞ்சம்
தந்தையே உன் தயவின்றி

இறைஞ்சுகின்றேன் இறைவனிடம்
இன்னோரு ஜென்மம்
உன்னோடு நானிருக்கும்
உன்னத நாட்களுக்காய்…….

Advertisements

3 Responses to “இனி வருமோ”

 1. //கால் இடறி நான் விழுவேன்
  வலியெதுவும் எனக்கில்லை
  ஆனபோதும் உன்
  விழிவளியே நீர் கசியும்//

  இன்று விழுந்தாலோ, அழுதாலோ அணைத்துக் கொள்ளவோ ஆறுதல் சொல்லவோ யாரும் இல்லை. நானும் என் தந்தையை தொலைத்து துடிக்கின்றேன் விஜய் உங்கள் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்

  தந்தையின் அருமை சொல்லுன் கவி

 2. S.SOTHEESWARARAJAH Says:

  ELLAM IRAVAN VITHI, NAMAKKU AVNGALODA VALA KODUTHTHU VAICHCHATHU AVVALAVUTHAN. MANAM KALANKATHE NANPA ENNILAIYUM UNNILAITHAN.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: