எங்கேயுன் மனசாட்சி

ஓ மனிதா எங்கேயுன்
மனசாட்சி
மறைத்துவைத்துவிட்டு
மனிதவேடம் பூணுகிறாயா
மரிக்கும்முன் வேடம்கலைத்து மனிதனாகவாழ்

உன்னைப்படைக்கும் இறைவன்
உனக்குத்துணையாகவே
உனக்கென்றொரு மனசாட்சியும் படைக்கிறான்
உபயோகப்படுத்தமறுப்பதேன்
உண்மையற்று வாழ்வதேன்

ஊனமற்ற உடலோடு படைத்தானுனையிறைவன்
ஊனம் நிறைந்த உளத்தோடு வாழ்கின்றாய் நீ
உன்மனசாட்சியோடுகொஞ்சம் உரையாடிவிடு
ஊனங்கள் களைவாய் உன்னையே நீ உணர்வாய்
உன்னத இன்பமும் அடைவாய்

உண்மையின்பம் எதுவென அறியாது
உலக இன்பத்தில் உறைந்துள்ள நீ
உறங்குமுன்மனசாட்சியை உடனெழுப்பிக் கேள்
உண்மைகள் பல அறிவாய்
உன்னதனெனும் பெயர் பெறுவாய்

அன்பென்பதேயறியாது
அரக்கனைப் போல் வாழும் நீ
அறிந்துவாழுன்மனசாட்சியை
இரக்கம்கொண்டு வாழ்வாய்
இம்மையிலே இன்பமும் அடைவாய்

பிறப்பின் நோக்கமறியாமல்
பிறரைக் கெடுத்துவாழும் நீ
பின்பற்றிவாழுன்மனசாட்சியை
பிறப்பின் நோக்கமும் அறிவாய்
பிறவிப்பயனுமடைவாய்

இறுதியாகக் கூறுகின்றேன் கேள்
இறைபக்தியற்று ஈனமாக வாழும் நீ
இருக்குமுன் மனசாட்சியைக் கேள்
இறுதிவரை இறைமகனாய் வாழ்வாய்
இறந்தபின்னும் இறைபக்கத்திலிருப்பாய்

5 Responses to “எங்கேயுன் மனசாட்சி”

  1. உலகில் பலருக்கும் மனசாட்சி இருந்தால் ஏன் சண்டை சச்சரவுகள் வரப்போகின்றது.

  2. விஜய் உங்கள் கவிதைகள் நல்லாயிருக்கு. வெறும் கவிதைகளுடன் நிற்காமல் கதை கட்டுரைகளும் எழுதவும். கவிதைக்கு என சில குறிப்பிட்ட வாசகர்களே இருக்கின்றார்கள்.

  3. நன்றி வந்தியண்ணா…
    நிச்சயமாக கதை கட்டுரைகளும் விரைவில் எழுதுகிறேன்

  4. //பிறப்பின் நோக்கமறியாமல்
    பிறரைக் கெடுத்துவாழும் நீ
    பின்பற்றிவாழுன்மனசாட்சியை
    பிறப்பின் நோக்கமும் அறிவாய்
    பிறவிப்பயனுமடைவாய்//

    உண்மை தான் விஜய் இதை உணராமல் தான் இத்தனை கொடுமைகள் இந்த உலகத்தில் நடக்குது. ஒவ்வொரு மனிதனும் மனசாட்சிக்கு உண்மையா இருந்தாலே போதும் வாழ்வு வளமடையும்

  5. nanraaha ullathu.

Leave a reply to suganthiny75 Cancel reply