வாழ்க்​கை வாழ்வதற்​கே……

சுற்றிலும் பார்த்​​தேன்,
சுற்றியும் பார்த்​தேன்
சு​மை​யெதுவும் அற்ற​போதும்
சு​மை​யென்ற வார்த்​தை​யை
சு​​மையாகச் சுமப்​போர் பலர்

எது சு​மை, எப்​போது சு​மை, எப்படி சு​மை..
சரி சு​மையாகத்தான் இருக்கட்டு​மே
சு​மைக​ளைக் ​கொடுத்த  இ​றைவன்
சுமப்பதற்கு ​தோள்க​ளைக் ​கொடுக்கவில்​லையா..?
சுமந்துபார் சு​மைகளும் சுகமாகும்

என்ன…..?
வாழ்வில் துன்பங்கள் நி​றைந்திருக்கின்றனவா…?
உனக்​கொன்று ​தெரியுமா….?
துன்பங்களின் அளவிலும் அதிக​மே
மீண்டுவரும் வழிக​ளையும்
அந்த இ​றைவன் ​கொடுத்துள்ளான்
வழிக​ளை நீ பயன்படுத்து
வாழ்வு வலிகளற்றதாகும்

ஓ……….
வாழ்வில் த​டைக்கற்க​ளே அதிகம் என்கிறாயா……?
த​டைவரும் அளவிலும் பன்மடங்கு
தகர்த்​தெறியும் தைரியம் உன்னிடமுண்டு
தன்னம்பிக்​கை​யோடு ​பயன்படுத்து தைரியத்​தை
த​டைக்கற்களும் இனிப் படிக்கற்களாகும்

இன்னல்கள் மடடு​மே
உன் வாழ்வில் நீடிக்கின்றன என்கிறாயா…..?
ஒருக்காலும் இல்​லை,
ஒன்று ​தெரியுமா
எதுவு​மே எப்​பொதும் நீடிப்பதில்​லை
நம் இன்னல்களும் கூட

சில உண்​மைக​ள் ​​கேள்
ஒளியிருந்தால் இருளிருக்கும்
குளு​மை இருந்தால் ​வெப்மிருககும்
உயரம் இருந்தால் பள்ளமும் இருக்கும்
அ​மைதி இருந்தால் புயல் இருக்கும்
வளம் இருந்தால் வறு​மை இருக்கும்
வாழ்க்​கை இருந்தால் மரணமும் இருக்கும்

வாழ்க​கையில்
சு​மைகளும் இருக்கும் சுமப்பதில் சுகங்களுமிருக்கும்
துன்பமும் இருக்கும் மீளும் வழிகளும் இருக்கும்
த​டைக்கற்களுமிருக்கும் அது படிக்கற்களாகவும் மாறும்
மொத்தத்தில் நேர்களும் இருக்கும் ம​றைகளும் இருக்கும்
ம​றைக​ளை மறந்து ​நேர்க​ளைப் பார்
நி​றைவான வாழ்க்​கை உனக்குண்டு
வாழ்க்​கை வாழ்வதற்​கே……

Advertisements

7 Responses to “வாழ்க்​கை வாழ்வதற்​கே……”

 1. Joshua Isaiah Says:

  Great work bro. This is reality. I like your poems alot
  They are very inspiring

 2. Joshua Isaiah Says:

  Nice work bro.
  I like your poems. They are very inspiring

 3. ஒருகணம் பலவாறு சிந்திக்க வைக்கும் உன் சிந்தனைகளின் எழுத்து வடிவம், உண்மையான பாராட்டுகள் பெறவேண்டிய ஒரு அற்புதமான உன் சொத்துக்கள்.
  உன் ஆற்றல் மேலும் மேலும் வளர வேண்டும்…..

  என்றும் என் அன்பும் ஆசியும் உனக்காக…

 4. Thanks Roy, Thank you so much

 5. அருமை தம்பி . உங்கள் சிந்தனைகள் வரி வவெம் பெற்று வந்துள்ளதை காண முடிகிறது.

 6. அன்புக் கவித் தம்பீ!

  நான் வித்யாசாகரின் அன்புக்குரிய

  தமிழ் நாட்டுக் கவிஞன்.

  இலக்கியப் பேச்சாளன்.

  என்னைச் சற்றே.. என் வலை தளத்தில்

  கண்டு கொண்டு பிறகு வாயேன் பேசுவோம்.

  தொடர்ந்து சந்திப்போம். சிந்திப்போம்.நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: