கருப்​பையில் நான் இருக்​கையி​லே

கருப்​பையில் நான் இருக்​கையி​லே
களித்த அந்த நாட்க​ளை
விளக்க நி​னைக்கின்​றேன் – என்
விளிகளுக்குள் வியர்​வை ஏ​னோ..

உள்ளிருக்கும் நான்
உள்ளத்தில் சிறந்தவனா….?
உண்​மைகள் நி​றைந்தவனா…?
உனக்காக வாழ்பவனா….?
உணர்ந்ததில்​லை ஏதும் நீ

கருப்​பையில் இருக்கும் நான்
கள்ளம்கபடமற்றவனா…?
அன்பில் சிறந்தவனா..?
அகிலத்​தை ஆழ்பவனா…?
அறிந்ததில்​லை ஏதும் நீ

ஆன​போதும் – நான்
கருக்​ கொண்ட நாள்முதலாய் – எ​னை
உருக் ​கொண்டு பார்க்க – உன்
உடல் ​கொண்டு உயிர் வ​ரைக்கு
எனக்​கென்​றே அர்ப்பணித்தாய்

அருவமான ஓர் ​பொரு​ளை
உருவம் ​கொண்டு பார்க்க
உன் இ​ரைப்​பையில் ஓரிடத்​தை
கருப்​பை​யென எனக்களித்து
களிப்​போடு வளர்ததாய்

உன்னுள் நான்
உருள்வதும் புரள்வதும்
உணர்ந்து​கொள்ள
உதரத்ததின ​மேல்​வைத்த ​கை​யை        (உதரம் – வயிறு)
ஒரு ​நொடியும் நீ எடுத்ததில்​லை

புரண்டுபடுத்தால் நான்
இறந்துவிடு​வே​னோ என
கருப்​பையில் நான் இருக்​கையி​லே
நீ கண்ணயர நி​னைத்ததில்​லை

சில​நொடிகள் என் துடிப்பு நின்றால்
பல​நொடிகள் நீ துடித்துவிடுவாய்
அறியாமல் நான்
உன்வயிற்றில் உ​தைக்​​கையி​லே
உளமாற நீ மகிழ்ந்திருப்பாய்

நீ இருப்பதும் எழுவதும்
உண்பதும் உடுப்பதும்
எனக்கென வளைந்துகொடுத்தாய்
உனதுயிரில் எனக்குயிர் ​கொடுத்து
உன் உதிரத்தில் என்னுடல் வளர்த்தாய்

உள்ளிருந்த ​வே​ளையி​லும் நான்
உணர்ந்து ​கொண்​டேன் ஓருண்​மை
தொட்டுப் ​போகும் உறவுகளில்
விட்டுப்​ போவதில்​லை என்றும்
தொப்புள் கொடி உறவு மட்டும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: