எங்கேயென் எழுதுகோல்..??????

Posted in Uncategorized on July 13, 2012 by singingstarvijay

கவி படித்து நானிருந்தேன்
கவி எழுதி  நானறியேன்
எழுதுமெண்ணம் இருந்ததில்லை
இருந்தும் எழுதிவிட்‌டேன் சிலகவிகள்

கவியென்று நானுரைக்குமுன்
உரைத்தனர் பல கவிஞ்ஞர்கள்
கவியல்லவா இதுவென்று
கவிஞ்ஞனானேன் நானுமன்று

“மனிதத்தைத் தேடுகின்றேன்” முதல்
“மன்னிப்பாயா” வரை மலர்ந்ததென் கவிகள்
மணம் வீசியது பலர் மனங்களில்
மனமகிழ்ந்தேன் அத்தினங்களில்

கவிதையும் நானுமாய்
கழிப்போடு நகர்ந்த என் நாட்கள்
கால ஓட்டத்தில் கலைந்து ‌போனது
கலையாத அந்த கவிகளோடு

காலங்கள் கடந்தும்
கவியுணர்வு என்னுள் தளிர்விட
கடந்துவந்த என்கவிப்பயணத்தை
கணப்பொழுது சிந்திந்தேன்

மன்னாரமுதன் முதல் மஞ்சு வரை
கொஞ்சும் வார்த்தைகளால்
விஞ்சும் கவிதையென
விதைத்த பல கருத்துக்களும்

பேரன்புடன் வித்தியாசாகர்
பெரும்தொலைவில் இருந்தும்
“அருமை”யென அழகுதமிழால்
பெருமையோடிட்ட பல கருத்துக்களும்

என்றோ நின்றுபோன
என் கவிப்பயணத்தை
இன்றே தொடரத்தூண்டுகின்றது
எங்கேயென் எழுதுகோல்…………..?????

மன்னிப்பாயா

Posted in Uncategorized on April 23, 2010 by singingstarvijay

இன்பங்கள் தேடும் உலகில் – நானும்
இறைவா உனைத்தேடுகின்றேன்
துன்பங்கள் ஏனை சூழ்கையில் – ஏனோ
துயரத்தால் உனை வெறுக்கின்றேன்
அங்கங்கள் உருகி வேண்டுகின்றேன் – இறைவா
அடிமை எனை மன்னிப்பாயா

வேசம் கொள்ளும் உலகில – நானும்
பாசம் கொள்ள நினைக்கின்றேன்
நாசம் செய்யும் பலரால் – ஏனோ
மோசம் செய்தும் வாழ்கின்றேன்
நேசத்தோடு கேட்கின்றேன் – இறைவா
தாசன் எனை மன்னிப்பாயா

மோகம் கொள்ளும் உலகில் – நானும்
நல்யாகம் இயற்ற நினைக்கின்றேன்
தாகம் பல என்னுள் வரவ – ஏனோ
தவறு செய்தும் வாழ்கின்றேன்
தேகம் உருக தேடுகின்றேன் – இறைவா
தேடும் எனை மன்னிப்பாயா

மனிதம் கொன்று வாழும் உலகில் – நானும்
புனிதம் கொண்டு வாழ நினைக்கின்றேன்
மீறும் என் உணர்வுகளால் – ஏனோ
மிருகம் கொண்டும் வாழ்கின்றேன்
கூறும் என்வார்த்தைகள் உன்பெயரை – இறைவா
குழந்தை எனை மன்னிப்பாயா

அரவணைக்கா உலகில் – நானும்
அன்புகாட்டநினைக்கின்றேன்
பிறரணைக்க மறுக்கையில் – ஏனோ
பித்துப்பிடித்தும் போகின்றேன்
எனையணைக்கும் உனை வேண்டுகின்றேன் – இறைவா
இனியும் அணைத்தெனை மன்னிப்பாயா

கருப்​பையில் நான் இருக்​கையி​லே

Posted in Uncategorized on February 25, 2010 by singingstarvijay

கருப்​பையில் நான் இருக்​கையி​லே
களித்த அந்த நாட்க​ளை
விளக்க நி​னைக்கின்​றேன் – என்
விளிகளுக்குள் வியர்​வை ஏ​னோ..

உள்ளிருக்கும் நான்
உள்ளத்தில் சிறந்தவனா….?
உண்​மைகள் நி​றைந்தவனா…?
உனக்காக வாழ்பவனா….?
உணர்ந்ததில்​லை ஏதும் நீ

கருப்​பையில் இருக்கும் நான்
கள்ளம்கபடமற்றவனா…?
அன்பில் சிறந்தவனா..?
அகிலத்​தை ஆழ்பவனா…?
அறிந்ததில்​லை ஏதும் நீ

ஆன​போதும் – நான்
கருக்​ கொண்ட நாள்முதலாய் – எ​னை
உருக் ​கொண்டு பார்க்க – உன்
உடல் ​கொண்டு உயிர் வ​ரைக்கு
எனக்​கென்​றே அர்ப்பணித்தாய்

அருவமான ஓர் ​பொரு​ளை
உருவம் ​கொண்டு பார்க்க
உன் இ​ரைப்​பையில் ஓரிடத்​தை
கருப்​பை​யென எனக்களித்து
களிப்​போடு வளர்ததாய்

உன்னுள் நான்
உருள்வதும் புரள்வதும்
உணர்ந்து​கொள்ள
உதரத்ததின ​மேல்​வைத்த ​கை​யை        (உதரம் – வயிறு)
ஒரு ​நொடியும் நீ எடுத்ததில்​லை

புரண்டுபடுத்தால் நான்
இறந்துவிடு​வே​னோ என
கருப்​பையில் நான் இருக்​கையி​லே
நீ கண்ணயர நி​னைத்ததில்​லை

சில​நொடிகள் என் துடிப்பு நின்றால்
பல​நொடிகள் நீ துடித்துவிடுவாய்
அறியாமல் நான்
உன்வயிற்றில் உ​தைக்​​கையி​லே
உளமாற நீ மகிழ்ந்திருப்பாய்

நீ இருப்பதும் எழுவதும்
உண்பதும் உடுப்பதும்
எனக்கென வளைந்துகொடுத்தாய்
உனதுயிரில் எனக்குயிர் ​கொடுத்து
உன் உதிரத்தில் என்னுடல் வளர்த்தாய்

உள்ளிருந்த ​வே​ளையி​லும் நான்
உணர்ந்து ​கொண்​டேன் ஓருண்​மை
தொட்டுப் ​போகும் உறவுகளில்
விட்டுப்​ போவதில்​லை என்றும்
தொப்புள் கொடி உறவு மட்டும்

இயேசையா…..

Posted in Uncategorized on December 18, 2009 by singingstarvijay

மண்ணுக்கு பெருமை – மைந்தன்
நீயிங்கு வந்ததனால் – அந்த
விண்ணுக்கு பெருமை – தேவன்
நீயங்கு இருப்பதனால் – எம்

கண்ணுக்குப் பெருமை – உன்னுருவம்
தினம் காண்பதனால் – அந்த
புண்ணுக்கும் பெருமை – உன்மேனி
புண்பட்டதனால் – விச

முள்ளுக்கும் பெருமை – என்தேவன்
முள்முடி சூடியதால் – வெறும்
கல்லுக்கும் பெருமை – அந்த
கல்வாரி சொல்லுமுன் பாடுகளால் – இரும்பு

ஆணிக்கும் பெருமை – உன்
மேனியிலே அறைந்ததனால் – மர
ஏணிக்கும் பெருமை – தேவனுனை
சிலுவையிலே ஏற்றியதால் – செய்த

பாவத்திற்கும் பெருமை – என்தேவன்
நீயெம்பாவங்கள் சுமந்ததனால் – கொடும்
பாவிக்கும் பெருமை – என்தேவன்
நீயந்தப்பாவிகளை மன்னித்ததால் – எம்

பிறப்புக்கும் பெருமை – நீவந்து
பிறந்ததனால் – எம்
இறப்புக்கும் பெருமை – நீ
இறந்தும் உயிர்த்ததனால்…

உயிர்ப் பிணங்கள்

Posted in Uncategorized on December 8, 2009 by singingstarvijay

உயிரற்றுப் ​போனால்
உ​ரைக்கின்றீர் பிண​​மென்று
உயிருள்ள ​போதும் – மனித
உணர்வற்றுப் ​போனால்
உயிருள்ள பிணம்தான் நீயும்

பார்​வையிளந்தால்
பார்க்கின்றீர் குருட​னென்று
பார்​வையுள்ள போதும் – பிறர்துன்பம்
பாரர்க்க மறுத்தால்
பார்​வையிள்ள குருடன்தான் நீயும்

கேண்மையிளந்தால்
கேட்கின்றீர்  ​​செவிட​னென்று
கேட்கும் திறனிருந்தும் – பிறர்கஸ்ரம்
கேட்க மறுத்தால்
கேட்பது​னை எவ்வாறு

கைகளற்றுப் ​போனால்
காண்கின்றீர் ஊனம்
கைகளிருந்த ​போதும்
கை​கொடுக்க மறுத்தால்
கயவனல்​லோ நீயும்

உணர்வற்றுப் ​போனால்
உ​ரைக்கின்றீர் ​ஏ​தே​தோ
உணர்வுள்ள​போதும் – ​பொது
உணர்வற்றுப் ​போனால்
உ​ரைப்பது​னை எவ்வாறு

உயிருள்ள பிண​மேன்​றோ……?

வாழ்க்​கை வாழ்வதற்​கே……

Posted in Uncategorized on November 24, 2009 by singingstarvijay

சுற்றிலும் பார்த்​​தேன்,
சுற்றியும் பார்த்​தேன்
சு​மை​யெதுவும் அற்ற​போதும்
சு​மை​யென்ற வார்த்​தை​யை
சு​​மையாகச் சுமப்​போர் பலர்

எது சு​மை, எப்​போது சு​மை, எப்படி சு​மை..
சரி சு​மையாகத்தான் இருக்கட்டு​மே
சு​மைக​ளைக் ​கொடுத்த  இ​றைவன்
சுமப்பதற்கு ​தோள்க​ளைக் ​கொடுக்கவில்​லையா..?
சுமந்துபார் சு​மைகளும் சுகமாகும்

என்ன…..?
வாழ்வில் துன்பங்கள் நி​றைந்திருக்கின்றனவா…?
உனக்​கொன்று ​தெரியுமா….?
துன்பங்களின் அளவிலும் அதிக​மே
மீண்டுவரும் வழிக​ளையும்
அந்த இ​றைவன் ​கொடுத்துள்ளான்
வழிக​ளை நீ பயன்படுத்து
வாழ்வு வலிகளற்றதாகும்

ஓ……….
வாழ்வில் த​டைக்கற்க​ளே அதிகம் என்கிறாயா……?
த​டைவரும் அளவிலும் பன்மடங்கு
தகர்த்​தெறியும் தைரியம் உன்னிடமுண்டு
தன்னம்பிக்​கை​யோடு ​பயன்படுத்து தைரியத்​தை
த​டைக்கற்களும் இனிப் படிக்கற்களாகும்

இன்னல்கள் மடடு​மே
உன் வாழ்வில் நீடிக்கின்றன என்கிறாயா…..?
ஒருக்காலும் இல்​லை,
ஒன்று ​தெரியுமா
எதுவு​மே எப்​பொதும் நீடிப்பதில்​லை
நம் இன்னல்களும் கூட

சில உண்​மைக​ள் ​​கேள்
ஒளியிருந்தால் இருளிருக்கும்
குளு​மை இருந்தால் ​வெப்மிருககும்
உயரம் இருந்தால் பள்ளமும் இருக்கும்
அ​மைதி இருந்தால் புயல் இருக்கும்
வளம் இருந்தால் வறு​மை இருக்கும்
வாழ்க்​கை இருந்தால் மரணமும் இருக்கும்

வாழ்க​கையில்
சு​மைகளும் இருக்கும் சுமப்பதில் சுகங்களுமிருக்கும்
துன்பமும் இருக்கும் மீளும் வழிகளும் இருக்கும்
த​டைக்கற்களுமிருக்கும் அது படிக்கற்களாகவும் மாறும்
மொத்தத்தில் நேர்களும் இருக்கும் ம​றைகளும் இருக்கும்
ம​றைக​ளை மறந்து ​நேர்க​ளைப் பார்
நி​றைவான வாழ்க்​கை உனக்குண்டு
வாழ்க்​கை வாழ்வதற்​கே……

நட்பு….

Posted in Uncategorized on November 12, 2009 by singingstarvijay

தனக்கில்லை என்றபோதும்
தன்தேவை பார்ப்பதில்லை
தன்னிறைவு காணபதில்லை
நண்பனுக்கோர் தேவையென்றால்
இருப்பதையும் கொடுத்துவிட்டு
இல்லாமலிருப்பதிலும்
இன்பம் காண்பதுவே நட்பு

வீட்டுக்கொரு வேலையென்றால்
வெளியே செல்வதில்லை
வீணாக அலைவதில்லை
நண்பனுக்கோர் வேலையென்றால்
நாளிகைகள் பலதாண்டி
நாள்முளுதும் அலைவதிலும்
நற்சுகம் காண்பதுவே நட்பு

கேட்டபோதும் கொடுப்பதில்லை
அண்ணனுக்கோ தம்பிக்கோ
எம்முடையை
நட்பென்று வந்துவிட்டால்
கேளாமலே கொடுத்துவிட்டு
அவன் அணிந்துவரும் அழகைப் பார்த்து
அகம் மகிழ்வதே நட்பு

சரியெது தவறெது
நல்லது கெட்டது
யார்சொல்லியும் கேட்பதில்லை
நண்பனொருவன் உரைத்துவிட்டால்
நாள்முழுதுமதுவே வேதவாக்கு
நாட்கள் கடந்துமதுவே
நல்வாக்கு

உயிர்தந்த பெற்றோரிடம்
உடன்பிறப்புகக்களிடம்
உறவுகளிடமும்
மறைத்துவிடும் விடையங்களைக் கூட
மகத்தான நண்பணிடம்
மனம் திறந்து பேசிவிட்டு
மனஅமைதி கொள்வதுவே நட்பு

மொத்தத்தில் நட்பு
உறவுகளில் உன்னதம்
உணர்வுகளில் அற்புதம்
உரிமைகளில் முதலிடம்
உயிரிலும் மேலிடம்
தேவையென்று வந்துவிட்டால்
உயிரையும் கொடுத்துவிடும்

சுகம்…….

Posted in Uncategorized on November 9, 2009 by singingstarvijay

தத்தி தத்தி
தவழ்கையிலே
தாய்ப்பால் சுகம்

அடியெடுத்து
அன்னநடை பழகையிலே
அருமைத்தந்தையுடன்
அங்குமிங்கும் செல்தல்
அளவற்ற சுகம்

பள்ளிப்பருவமதில்
பத்துநிமிட இடைவேளையிலே
பலநூறு ஆட்டங்கள்
ஆடுவதுதான்
என்ன சுகம்

வளர்ந்துவரும் பருவமதில்
தொடர்ந்துவரும்
நட்பு சுகம்
தொலைதூரப் பயணங்கள்
சொல்லொண்ணா சுகம்

பதினாறு வயதினிலே
பற்றிக்கொள்ளும் காதல்சுகம்
அப்பப்போ அவள்மீது கொள்ளும்
அன்பான ஊடல்சுகம்
அணைக்கையிலே அதிகசுகம்

கட்டிய மனைவி சுகம்
கடந்தகால நினைவுகளை அவளோடு
கதையாகச் சொல்லி
களிப்படைதல்
கனிவான சுகம்

பெற்றெடுத்த பிள்ளைசுகம்
பேரழவு நேரங்கள்
மழலைமொழி பேசி
மகிழ்ந்திருத்தல்
மட்டற்ற சுகம்

இத்தனை சுகங்கள் கண்டும்
ஏழுகளுதை வயது வந்தும்
தத்தி தத்தி தவழ்கையிலே
தாய்ப்பாலூட்டிய
தாய்மடியில் தலைசாய்தல் போல்
தரணியிலே சுகமுண்டோ……….

இதுவும் காதலா………..?

Posted in Uncategorized on November 6, 2009 by singingstarvijay

அந்த அழகிய காலைப் பொழுது
அவளது தொலைபேசி அலறியது
அவனின் காத்திருப்பு
அவளுக்கு புரிந்தது
அடுத்தொரு யோசனையுமின்றி
அக்கணமே புறப்பட்டாள்
அவனைக்காண

அன்பே,
ஆருயிரே,
கண்ணே,
மணியே, என
காலை முதல் மாலை வரை
மணிக்கணக்கில்….
அவனோடு…..

அந்த அழகிய (அழுகிய) மாலைப்பொழுது..
மீண்டும் அவள் தொலைபேசி அலறியது..
அப்போதுதான்…
அயல்நாடு சென்ற அருமைக்காதலன்
அவள் நினைவைத் தொட்டது…
தொட்டகுறை விட்டகுறை என
இங்கு இவனை விட்டுவிட்டு
எழுந்து சென்றாள்
எங்கோ இருக்கும் தன் காதலனோடு
இனிய ​மொழி ​பேச
இதுவும் காதலா……………….?

எங்கேயுன் மனசாட்சி

Posted in Uncategorized on October 26, 2009 by singingstarvijay

ஓ மனிதா எங்கேயுன்
மனசாட்சி
மறைத்துவைத்துவிட்டு
மனிதவேடம் பூணுகிறாயா
மரிக்கும்முன் வேடம்கலைத்து மனிதனாகவாழ்

உன்னைப்படைக்கும் இறைவன்
உனக்குத்துணையாகவே
உனக்கென்றொரு மனசாட்சியும் படைக்கிறான்
உபயோகப்படுத்தமறுப்பதேன்
உண்மையற்று வாழ்வதேன்

ஊனமற்ற உடலோடு படைத்தானுனையிறைவன்
ஊனம் நிறைந்த உளத்தோடு வாழ்கின்றாய் நீ
உன்மனசாட்சியோடுகொஞ்சம் உரையாடிவிடு
ஊனங்கள் களைவாய் உன்னையே நீ உணர்வாய்
உன்னத இன்பமும் அடைவாய்

உண்மையின்பம் எதுவென அறியாது
உலக இன்பத்தில் உறைந்துள்ள நீ
உறங்குமுன்மனசாட்சியை உடனெழுப்பிக் கேள்
உண்மைகள் பல அறிவாய்
உன்னதனெனும் பெயர் பெறுவாய்

அன்பென்பதேயறியாது
அரக்கனைப் போல் வாழும் நீ
அறிந்துவாழுன்மனசாட்சியை
இரக்கம்கொண்டு வாழ்வாய்
இம்மையிலே இன்பமும் அடைவாய்

பிறப்பின் நோக்கமறியாமல்
பிறரைக் கெடுத்துவாழும் நீ
பின்பற்றிவாழுன்மனசாட்சியை
பிறப்பின் நோக்கமும் அறிவாய்
பிறவிப்பயனுமடைவாய்

இறுதியாகக் கூறுகின்றேன் கேள்
இறைபக்தியற்று ஈனமாக வாழும் நீ
இருக்குமுன் மனசாட்சியைக் கேள்
இறுதிவரை இறைமகனாய் வாழ்வாய்
இறந்தபின்னும் இறைபக்கத்திலிருப்பாய்